+2 தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிகளை வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது: இத்தேர்வில் 8,16,473 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 3,80,500 மற்றும் மாணவிகள் 4,35,973 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கொரோனா பரவலை பொறுத்து தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வில் 600 க்கு 600 எடுத்தவர்கள் யாரும் இல்லை. என கூறினார்.