“சூர்யா 40” பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

சூர்யாவின் 40 வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி . இமான் இசை அமைக்கிறார். பிரியங்கா மோகன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், சரண்ய பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறன்றன.

இந்நிலையில் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் வருகிற ஜூலை 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.