பாகுபலி வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா

ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெற்ற பாகுபலி திரைப்படத்தை வெப் சீரியசாக எடுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள பாகுபலி வெப் சீரிஸில் நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபகாலமாகவே வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இதுவரை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவும் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார் .

மேலும் வருகிற செப்டம்பர் மாதம் பாகுபலி வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .