ஒப்போவில் ரெனோ6 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ6  5ஜி அறிமுகம்

ஒப்போ மொபைல் நிறுவனம்  ரெனோ6 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ6  5ஜி என்ற தனது அடுத்த புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

5ஜி சூப்பர் போன் ஆன ரெனோ6 ப்ரோ 5ஜி சில்லரை விற்பனையங்கங்களிலும் பிளிப்கார்ட்டிலும் ரூ.39,990-ல் கிடைக்கும்; ரெனோ6 5ஜி பிளிப்கார்ட்டில் ரூ.29,990-ல் கிடைக்கும்.   ரெனோ6 ப்ரோ 5ஜி-யில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 [MediaTek Dimensity 1200], ரெனோ 6 5ஜி-யில் மீடியாடெக் டைமன்சிட்டி 900  [MediaTek Dimensity 900] ஆகிய  ஆற்றல்மிக்க சிப்செட்களைக் கொண்டு ரெனோ6 சீரிஸ் இயக்கப்படுகிறது.   65W சூப்பர் விஓஓசி பிளாஷ் சார்ஜிங், கலர் ஓஎஸ் 11.3, ஸ்லிம்மான வடிவமைப்பு (65W SuperVOOC flash charging,  Color OS 11.3, the slim design) ஆகியன வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கிடைக்கச் செய்யும்.

ரெனோ6 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ6 5ஜி இரண்டிலும் பின்புறத்தில் ஒரு மிகச்சிறப்பான 64 எம்பி குவாட் கேமரா, ஒரு 32 எம்பி முன்புற கேமரா (AI 64MP quad-camera setup on the rear and a 32MP front camera) உள்ளன.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்பலிங் ரேட் (90Hz refresh rate and up to 180Hz touch sampling rate) உடன் ஒரு 6.5 இன்ச் 3D கர்வ்டு டிஸ்ப்ளே (6.5-inch 3D curved display) மென்மையான உணர்வையும் வசதியான காட்சி அனுபவத்தையும் உறுதிபடுத்துகிறது.

12ஜிபி ராம், 256ஜிபி ரோம் உடன் ஒப்போ தானாக மேம்படுத்திய ராம் விரிவாக்க தொழில்நுட்பத்தையும் (RAM Expansion technology) இந்த ரெனோ6 ப்ரோ 5ஜி கொண்டுள்ளது.  ரெனோ6 ப்ரோ 5ஜி-யில் உள்ள ஒரு பெரிய 4500mAh பேட்டரியும் சூப்பர் விஓஓசி2.0வும் (SuperVOOC 2.0), 31 நிமிடங்களில் 100% சார்ஜ் பெற செய்கிறது; ரெனோ6 5ஜியில் உள்ள 4300mAh பேட்டரியும் சூப்பர் விஓஓசி2.0வும் 28 நிமிடங்களில் 100% சார்ஜ் பெற செய்கிறது.