எமோஜி உலகின் புது பொது மொழி

மொழி பலவிதமான உணர்வுகள், கருத்துக்களை சக மனிதருக்கு புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. உலகில் பல்லாயிரக்கணக்கான மொழி வடிவங்கள் உள்ளன. எத்தனை வகைகள் இருந்தாலும் இதன் தாயாக சின்னங்கள் தான் இருந்துள்ளது. அதாவது நாம் தற்பொழுது பயன்படுத்தி வரும் எமோஜி போன்று மொழி உருவாவதற்கு முன் வரைபடங்கள் மூலம் தான் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததாக இதுவரை கண்டறியப்பட்ட குகைகளில் நாம் காணும் ஓவியங்கள் தான் அன்றைய மொழி. இது அனைவருக்கும் புரியும். இது மொழி என்பது உருவாவதற்கு முன் இருந்த முறை, இதுவே தற்பொழுது நவீன உலகம் என்று கூறப்படும் அவரசகால சுயநல உலகத்தில் இந்த எமோஜி ஸ்மைலீஸ் வார்த்தைகள் இன்றி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

இந்த எமோஜி வகைகள் இன்றைய காலகட்டத்தின் இளம் தலைமுறையினர் என்றழைக்கப்படும் 2கே கிட்ஸ் மிக அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தங்களது சுயவிவரம் முதல் அரட்டை என்பதும் சேட்டிங் வரை அனைத்திலும் இந்த எமோஜிஸை பயன்படுத்துகின்றனர்.

இன்றைய நவீன காலத்தின் மொழியாக மாறிய எமோஜிக்கள் தனக்கென ஒரு தினத்தையே கொண்டுள்ளது. ஆம் இன்று உலக எமோஜி தினம். ஒவ்வொரு ஆண்டும் புது புது எமோஜிக்கள் வெளியிடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு NINJA, Father Parenting, நிறவெறிக்கு எதிராக கைகொடுக்கும் குறியீடு உள்ளிட்டவை வெளியாக உள்ளது. மொழிகளுக்கு மாற்றாகத்தான் எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

உலகின் எந்த நாட்டுக்காரரும், எந்த மொழி பேசுபவரும் புரிந்துக் கொள்ளும் மொழியாக எமோஜிக்கள் உள்ளன. உலகின் பொது மொழியாக எமோஜிக்கள் மாறிவிட்டது. ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய ஜப்பானியர்கள், இன்றைக்கு எமோஜிக்களை உருவாக்கி, எமோஜியில் கவிதைகள் உருவாக்க கற்றக்கொடுத்துள்ளனர்.

எமோஜியில் கவிதைகளா? புதுமொழியை நாமும் மாற்றுக்கொள்வோம். வளர்ச்சி என்ற பெயரில் எழுத்து வடிவில் இருந்து பின்னோக்கி பழங்கால முறையில் புது வடிவில் எமோஜிஸ் உருவாகியுள்ளது. இது எப்படி மேலும் வளர்ச்சி அடையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.