கே.பி.ஆர் கல்லூரியில் “பெருந்தலைவரும் கல்வி வளர்ச்சியும்” – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் இரஞ்சனி கலந்து கொண்டு “பெருந்தலைவரும் கல்வி வளர்ச்சியும் ” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

“அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்” என்பதை முதன்மையாகக் கொண்டு கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதலும், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும் என்பதை எடுத்துரைத்தார். கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறி, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது. எனவே, சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளை தகர்த்தெறியவும், நாம் நன்கு படித்தவர்களாக இருப்பதுடன் மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எவ்வாறு பங்காற்றுகிறது என்பதையும் அறிந்து கொண்டு ஒவ்வொரு மாணவர்களும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.