பெட்ரோல் விலை உயர்வால் வாகன உற்பத்தி குறைகிறதா?

கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் விலை சத்தமில்லாமல் சதமடித்து மீண்டும் உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனத் துறை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் பேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கெனிச்சி அயுக்காவா, எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களின் தேவை ஒருபுறம் குறைவதுடன், மறுபுறம் அவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடியும் உள்ளதாக தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.