ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பாக உலக சாக்லெட் தின கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பாக 35 வகையான சாக்லெட்டுகளுடன் ‘உலக சாக்லெட் தினம்’ (07.07.2021) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை தொடங்கப்பட்டு 35 – வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதனைக் கொண்டாடும் வகையில் உலக சாக்லெட் தினமான இன்று இத்துறை சார்பாக மில்க், ஸ்ட்ராபெரி, உலர்திராட்சை, அத்திப்பழம், பாதாம் போன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு 35 வகையான சாக்லெட்கள் தயாரிக்கப்பட்டன.

உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறையின் முன்னாள் மாணவரும் கோவையின் முன்னணி சாக்லெட் நிறுவனத்தின் நிறுவனருமான க.அஜித்குமார், 35 வகையான சாக்லேட்டுகள் தயாரித்து கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் அவர்களிடம் வழங்கினார்.

உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் எஸ்.தீனா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

அண்மையில் கோவை மாவட்டத்தின் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்ட இந்தியா டுடே இக்கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறைக்கு முதலிடம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.