திறனறித் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

தேசிய மற்றும் ஊரக திறனறித் தேர்வில் வருடம்தோறும் பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைத்து திறனாய்வு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று உதவி தொகையை தொடர்ந்து பெற்று வருகின்றனர்

காரமடை ஒன்றியம் பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 650 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு நடத்தும் ஊரக திறனாய்வுத் தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மகேஸ்வரன் மற்றும் மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வில் பிரியா, திவாகர் ஆகிய இரு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இணையவழி மூலம் ஊரடங்கு காலத்தில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இத்தேர்வின் மூலம் மாணவர்களுக்கு மாதம் 1,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் 48,000 ரூபாய் ஊக்கத் தொகை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.