பளபளக்கும் வெள்ளை சர்க்கரையில் ஆபத்து !

காலை எழுந்து காபி, டீ குடிப்பதில் தொடங்கி சில நேரங்களில் சர்க்கரை கலந்த இனிப்பு பலகாரங்களோடு, இரவு குடிக்கும் பால் வரை சர்க்கரையில்லாமல் உணவுகளை சுவைப்பதில்லை என்று வாழ்கிறோம்.

சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின்கள் நிறைந்த கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுக்கிறேன் என்று அதிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் ஒழித்து நஞ்சாக்கி வெள்ளையாக்கித் தருவதுதான் இந்த வெள்ளை சர்க்கரை என்பதில் மாற்றமில்லை.

அதிலும் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் இராசயனப் பொருள்கள் உடலுக்குக் கடுமையான தீங்கை ஏற்படுத்தக் கூடியவை. சத்தில்லாத இந்த சர்க்கரையில்இனிப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இதில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

குடல்புண், உடல் பருமன், பற்களில் சொத்தைகளை உண்டாக்குவது, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைவதோடு , பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும் சர்க்கரை அளித்த பங்கு அளவில்லாதது.

சர்க்கரை நோய்க்கு மாறிவரும் உணவுப் பழக்கமே காரணம் என சொன்னாலும், அளவுக்கு மீறி சர்க்கரை சாப்பிடுவதும் சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என்பது சொல்லப்படாத உண்மை.

தற்போது சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ என்று சொல்லப்படும் சர்க்கரை கூட உடல் நலத்துக்கு நல்லதல்ல. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயமுண்டு என்கிறார்கள்.

இனிப்போடு கலந்த உணவை, பண்டைய கால அரசர்கள் முதல் முன்னோர்கள் வரை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவையெல்லாம் தேன், வெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை முதலானவற்றால் தயாரிக்கப்பட்ட ஆபத்தை ஏற்படுத்தாத இனிப்பு வகைகள்.

இயற்கையிலிருந்து எல்லாமே செயற்கையாக மாறிவரும் சூழ்நிலையில், மீண்டும் மக்கள் பாரம்பரிய உணவுகளை நாடி படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள். ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெல்லம், பனங்கட்டி மற்றும் நாட்டுச் சர்க்கரைகளை சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ மற்றும் சர்க்கரை வியாதியோ வராது.