இணையம் எங்கும்  #BEAST அலை

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருக்கும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 முதல் பார்வை போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்த அலை பேரலையாக உருமாறும் முன் இந்த படத்தை தயாரிக்கும் “சன் பிக்சர்ஸ்” இது இன்னும் முடியவில்லை, இனிமேல் தான் ஆரம்பம் என்று இரண்டாவது போஸ்டரை இரவு 12 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்தவுடன், ரசிகர்களுக்கு கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்றது போல் ஏற்கனவே மகிழ்ச்சியில் பொங்கி இருந்த ரசிகர்கள், ஆனந்த பேரலையில் தத்தளிக்க ஆரம்பித்து விட்டனர்.

Image

இந்த அலையின் தாக்கம் விஜய்யின் 65 வைத்து படம் என்பதால், 65 மணி நேரம் தான் உள்ளது எனவும் 65 நிமிடம்  தான் உள்ளது எனவும், 65 நொடிகள் வரை தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி கொண்டே இருந்தனர். இந்த எதிர்பார்ப்பிற்கு சரியான தீனி போடும் விதமாக தளபதி 65 இரு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அதிரவைத்துள்ளது.

Beast Second Look Poster

இந்த இரண்டு போஸ்டர்கள் தான் சமூக வலைதங்களில் பிரபலங்கள் முதல் அனைவரின் பதிவாகவும், பகிர்வாகவும் உள்ளது. இது  #BEAST mood என்று ஹாஸ்டேக் போட்டு இணையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில் பட்டு கொண்டே இருக்கிறது.