பாகுபலி வெப் சீரிஸில் சிவகாமியாக நடிக்க நடிகை மறுப்பு

பாகுபலி கதை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெப் தொடராக உருவாக இருக்கிறது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக இருக்கிறது. மேலும் பாகுபலி கதையில் வரும்  ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்படவுள்ளது .

இந்நிலையில் இளம் வயது சிவகாமியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் பாகுபலி வெப் தொடரில் நடிக்க அவரை அணுகியுள்ளனர். ஆனால் இந்த வெப் தொடரில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது