ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு நிதியுதவி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் பேரவை கூட்டத்தில் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பொருளாதார தேவைகளை சந்திக்கும் பொருட்டும், மாணவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், மாணவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தோடும் கல்வி கட்டண உதவிகள் வழங்கப்பட்டது.

இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை அமைப்பின் சார்பாக இவ்வாண்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் .ஆர்.என் உமா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் ஒவ்வொரு துறையிலும் ஒரு மாணவருக்கு அவர்களின் கல்வி கட்டணத்தில் பாதி கட்டண தொகையினை, முன்னாள் மாணவர் பேரவை அமைப்பின் சார்பாக நிதியுதவி வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. மாணவர்களின் கடின உழைப்பை அங்கிகரிக்கும் வகையிலும், மாணவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தோடும் இக்கல்வி கட்டண உதவிகள் வழங்கப்பட்டது.

இப்பேரவை கூட்டத்தில் இதன் தலைவர் V.சுரேந்திரன், பேரவை அமைப்பின் குறிப்பிடத்தக்க தொழில் முனைவோர் எஸ். அருள் பிரபு, உரிமையாளர், SAP இன்ஜினீரிங், கோவில்பாளையம் மற்றும் மாசிலாமணி ,ஆட்டோ கன்சல்டிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.