மெய்ப்பொருள் நாயனார் எப்படிப்பட்ட சிவ பக்தர்!

பொதுவாக, அரசன் என்றால் அகங்காரமும் அவனுக்கு எதிரிகளும் இருப்பது வழக்கமானது. ஒரு அரசனாகவும் சிவ பக்தராகவும் திகழ்ந்த மெய்ப்பொருள் நாயனாருக்கு நேர்ந்த நெகிழ்வான சம்பவம் அவரின் அசைவில்லா பக்தியை உணர்த்துகிறது!

தென்னிந்தியாவில் மெய்ப்பொருள் நாயனார் என்று ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவபக்தர். எப்படிப்பட்ட பக்தர் என்றால், யாரொருவர் சிறு அளவு திருநீறு அணிந்திருந்தாலும், அவரை சிவனாகவே நினைத்தார், பரிபூரணமாக நம்பினார். ஒரு அரசர் இவ்வாறு வாழ்ந்தால், அது அவருக்கு எப்போதுமே ஆபத்துதான். ஆனால் அதுபற்றி அவர் கவலைப்படவில்லை. சிவனை, சிவனிடம் கொண்ட பக்தியை தன் உயிரினும் மேலாகவே கருதினார். இப்படி இந்த அரசர் இருப்பதை அறிந்த அவரின் எதிரிகளில் ஒருவர், சிவபக்தராக வேடம் பூண்டு, திருநீற்றை நெற்றி முழுவதும் இட்டுக்கொண்டு, அவரைக் கொல்லும் நோக்குடன் அரண்மனைக்குள் வந்தார்.

அவரைக் கண்டதும், மன்னர் சிரம் தாழ்த்தி, வந்தனம் செய்து வரவேற்றார். நல்ல நேரம் பார்த்து வந்தவன் மறைத்து வைத்திருந்த வாளை அரசரின் பின்புறத்தில் குத்தினான். அந்த வாள் அவர் உடலின் பின்புறத்திலிருந்து முன்பாக வந்தது. இதன் சித்தரிப்பை தியானலிங்க உள்மண்டபத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். குத்துப்பட்ட அரசர் உடனே காவல்வீரர்களை அழைத்து, ‘இவரை உடனடியாக ஊர் எல்லைக்கு அப்பால் அழைத்துச் சென்று விட்டுவிடுங்கள். நடந்ததை அறிந்தால் ஊர்மக்கள் இவரைக் கொன்று விடக்கூடும். இவர் சிவனின் அடையாளமான திருநீற்றை அணிந்துள்ளார். அதனால் இவர் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை. முதலில் இவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுவிடுங்கள்’ என்று கூறினார்.

இதுதான் அசைவில்லா நம்பிக்கை என்பது. பக்தி என்பது.

குறிப்பு: மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மிக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கின்றன.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருடம் ஈஷா மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்?

அனைவருக்கும் ஆதியோகியின் ருத்ராட்சம் வரப்பிரசாதமாகக் கிடைக்கும்!

கடந்த (2017) மஹாசிவராத்திரியில் 112 அடி ஆதியோகி திருமுக பிரதிஷ்டையின்போது, தன்னார்வத் தொண்டர்களால் கோர்க்கப்பட்டு ‘லட்சத்து எட்டு’ ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகிக்கு அர்ப்பணையாக அணிவிக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலம் அந்த மாலை ஆதியோகியின் உடலை அலங்கரித்து வருகிறது! அந்த மாலையிலுள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும் இவ்வருட மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரடியாக வருகைதரும் அனைவருக்கும் ஆதியோகி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது! தமிழ் மக்கள் அனைவரும் இதனைப் பெற வேண்டும் என்பது சத்குருவின் பெரும் விருப்பமாக உள்ளது! ஆதியோகி ருத்ராட்ச பிரசாதத்தைப் பெற முன்பதிவோ அல்லது நன்கொடையோ தேவையில்லை!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கவும் விபரங்கள் தெரிந்து கொள்ளவும் :

தொலைபேசி எண்: 83000 83111

மின்னஞ்சல்: info@mahashivarathri.org <mailto:info@mahashivarathri.org>

இணையதளம்: tamil.sadhguru.org/MSR