நேற்று ஒரே நாளில் குப்பைகளை சுத்தம் செய்து அசத்திய மாநகராட்சி !

கோவை மாநகராட்சிக்கு உட்பட பல இடங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்தம் செய்து அசத்தியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நீண்ட நாட்கள் தேங்கக் கூடிய கழிவுகள், குப்பைகளை அகற்ற தீவிரமாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் தூய்மைப்பணிகள் நடைபெற்றது.

‘மாஸ் க்ளீனிங்’ (Mass Cleaning) என்ற பெயரில் 100 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் பணி தொடங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். அவ்வாறு, நேற்று சுத்தம் செய்யப்பட்ட பகுதிகள், சுத்தம் செய்யப்படுவதற்கு முன்பாக எப்படி இருந்தது என்பதை புகைப்படங்களை வைத்து வித்தியாசம் காட்டியுள்ளது மாநகராட்சி நிர்வாகம். அந்த படங்களை கீழே காணலாம்..!