வ.ஊ.சி. பூங்காவில் புது வரவாக 14 முதலை குட்டிகள்

கோவை மாநகராட்சி வ.ஊ.சி பூங்காவில் 25 வயதுடைய முதலை ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி உயிரியல் பூங்காவில் முதலை, கிளி, குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. இதனை காண வார விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவதில்லை. இந்நிலையில் குட்டி போடும் இனத்தை சேர்ந்த 25 வயதுடைய முதலை ஒன்று 14 குட்டிகளை ஈன்று உள்ளது.

மேலும் இங்கு 28 முதலைகள் உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து பூங்கா இயக்குநர் மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில், 14 குட்டிகளை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், இதனை தொடர்ந்து கண்காணிக்க பணியாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.