குழந்தைகளுக்கு ஜுலை முதல் கொரோனா தடுப்பு மருந்து!

ஜுலை முதல் நோவாவாக்ஸ் தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், புனேவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் ஜுலை முதல் குழந்தைகளுக்கு நோவாவாக்ஸ் என்ற தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐதரபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தை 12 முதல் 18 வயது வரை உள்ளோருக்கு செலுத்தும் சோதனையை ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்நிலையில் 2 முதல் 6 வயது வரை உள்ளோருக்கும், 6 முதல் 12 வயது வரை உள்ளோருக்கு தடுப்பு மருந்து செலுத்தும் சோதனையை தொடங்க உள்ளது.

மேலும் இந்நிறுவனம் சிறுவர்களுக்கு மூக்கு வழியாக தடுப்பு மருந்தை செலுத்தும் சோதனையையும் மேற்கொண்டு வருகிறது.