இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் ‘தேசிய எதிர்ப்பு தினம் அனுசரிப்பு’

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் நாட்டின் பல மாநிலங்களில் அடிக்கடி மருத்துவ பணியாளர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை கண்டித்தும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சட்டத்தைப் போல இந்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தேசிய எதிர்ப்பு தின போராட்டம்‘ நடத்தப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், பதவியேற்ற குறுகிய காலத்தில் கொரொனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை ஆக்கப்பூர்வமாக கட்டுப்படுத்திய தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மருத்துவத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்கள் அரசு மற்றும் தனியன் துறையில் இரவு பகல் பாராமல் கொரொனா பெருந் தொற்றுக்கு எதிரான போரில் செயல்படுகின்றனர். அவர்களின் தியாகத்தை புரியாமல் அசாம், உத்ர பிரதேசம், கர்நாடகா, மாகராஷ்டிரா, ஆந்திரா முதலிய இந்தியாவின் பல மாநிலங்களில் முன்களப் பணியாளாக்ள தாக்கப்படுகின்றனர்.

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 2008ம் ஆண்டு மருத்துவ துறையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பொருள்சேத இழப்பு ஆகியவற்றை தடுக்க அரசு ஆணை எண் 48/2008 வெளியிடப்பட்டு முறையாக செயல்படுத்துப்படுவதற்கு பாராட்டி நன்றி கூறுகிறோம். சமீபத்தில் நமது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றும் துறையினரை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்கிறோம்.

நமது நாட்டின் பல மாநிலங்களில் அடிக்கடி மருத்துவ பணியாளர்களின் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. பெண்களும் தாக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சட்டத்தைப் போல இந்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமை 2021 ஜூன் 18 ‘தேசிய எதிர்ப்பு தினமாக’, “காப்போரை காப்பீர்” என்ற அடைமொழி மூலம் அறிவித்துள்ளது.

இதில் முக்கிய கோரிக்கைகளாக, மத்திய அரசின் மருத்துவமனை சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களின் மீது தாக்குப்பவர்களை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது எந்த மருத்துவ சேவையும் நிறுத்தப்படாது என்றும்,  நோயாளிகளுக்கு கொரோனா வழிகாட்டுதல்படி இடைவிடாத மருத்துவ பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் மத்திய அரசை நமது மாநில அரசும், 2008ம் ஆண்டின் சட்டம் 48ன் பயன்களைப் எடுத்துத்துரைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.