கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று (31.5.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடவள்ளி, முல்லை நகர் ஆகிய பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் குறித்தும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் பணிகள் குறித்தும், தெர்மா மீட்டர் மூலம் வெப்ப அளவினை கண்டறியப்படும் பணிகள் குறித்தும் சுகாதார பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு அந்தந்த பகுதிகளுக்கு காய்கறிகள் பிரித்து அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.