மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது