விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் “தோழா” இயக்குனர்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் கசிந்து வந்தது.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரும், தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து இயக்குனர் வம்சி பைடிபல்லி கூறுகையில்:

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கோவிட் நிலைமை முடிவுக்கு வந்தபின் வெளியாகும் என்றும் இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் உள்ள மற்ற விவரங்கள் அனைத்தும் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.