பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வரின் அறிக்கையில் இதுகுறித்து வெளியிட்டுருப்பதாவது:

மக்களுக்கும்‌, அரசுக்கும்‌ ஒரு இணைப்புப்‌ பாலமாக இக்காலக்கட்டத்தில்‌ சிறப்பாக இயங்கிவரும்‌ இவர்களது பணியினை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்‌, தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ காலமுறை இதழ்களில்‌ பணிபுரியும்‌ செய்தியாளர்கள்‌, புகைப்படக்காரர்கள்‌ மற்றும்‌ ஒளிப்பதிவாளர்கள்‌ (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர்‌ வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப்‌ பேருந்துப்‌ பயண அட்டை போன்ற ஏதேனும்‌ ஒரு வகையில்‌ அரசால்‌ அங்கீகரிக்கப்பட்டவர்கள்‌) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத்‌ தொகை உயர்த்தி வழங்கப்படும்.

ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத்‌ தொகையினை ரூபாய்‌ 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய்‌ 5 ஆயிரமாக உயர்த்தியதோடு பத்திரிகை மற்றும்‌ ஊடகத்‌ துறையில்‌ பணிபுரியும்‌ அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள்‌ கொரோனா நோய் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால்‌, இழப்பீட்டுத்‌ தொகையாக ரூபாய்‌ 10 இலட்சம் வழங்கப்படும்.

மேலும்‌, பத்திரிகைத்‌ துறை மற்றும்‌ அனைத்து ஊடகத்‌ துறையினரும்  இந்த நோய் தொற்றுக்‌ காலத்தில்‌ மிகவும்‌ பாதுகாப்பான முறையில்‌ தங்கள்‌ பணியினை கவனமுடன்‌ மேற்கொள்ள வேண்டும் என அறியுறுத்தியுள்ளார்.