300 படுக்கை வசதிகளுடன் கவி கோவிட் கேர் மையம்

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி, கதிர் மில்ஸ் இணைந்து ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கவி கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று (26.05.2021) துவக்கி வைத்தார்.

கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோயால் பாதிக்கப்படுவோர் போதிய படுக்கை வசதி இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி, கதிர் மில்ஸ் இணைந்து ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கவி கோவிட் கேர் மையத்தை அமைத்துள்ளனர். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வழியாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி,வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியண், சாரதா டெர்ரி மற்றும் குழுமங்களின் தலைமை மேலாண் இயக்குனர் கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.