ஊரடங்கு காலத்தில் உறவுகள் பலப்படுகின்றனவா? பலவீனப்படுகின்றனவா? – பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பைந்தமிழ் மன்றமும், நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து வழங்கும் இணையவழி பட்டிமன்றம் ”கொரோனா ஊரடங்கு காலத்தில் உறவுகள் பலப்படுகின்றனவா? பலவீனப்படுகின்றனவா? எனும் தலைப்பில் (23.5.2021) நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார்.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கோகுல்நாத் நடுவராக இருந்து சிறப்பு செய்த இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள் பேச்சாளர்களாக இருந்து தம் கருத்துக்களை வழங்கினார்கள்.

பலப்படுகின்றன! அணியில் முதலாமாண்டு வணிகவியல் மாணவிகள் விஜயலட்சுமி, காவ்யா மற்றும் நான்காம் வகுப்பு பள்ளி மாணவி ஜனன்யா ஆகியோரும், பலவீனப்படுகின்றன, அணியில் முதலாமாண்டு வணிகவியல் மாணவன் கெளதம், மாணவி தன்யஸ்ரீ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவி.வினோதினி ஆகியோர் கலந்துகொண்டு உறவுகளின் உன்னத பெருமைகளையும், சிறுமைகளையும் கூறினார்கள்.

இறுதியில் மனித வாழ்வியல் வெற்றிக்கு உறவுகளின் உன்னத உயரிய பணியே இன்றியமையாதது என்பதை முன்வைத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் உறவுகள் பலப்படுகின்றன எனும் தீர்ப்பை நடுவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் துறைசார் பேராசிரியர்கள்மற்றும் மாணவர்கள் என150 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்.