மஞ்சள் பூஞ்சை பாதிப்பு – அறிகுறிகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கொரோனாவின் பிடியிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் இந்த கருப்பு புஞ்சை இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பீகாரில் நான்குபேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளுக்கு அடுத்தாததாக தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்களைப் போல் இல்லாமல், மஞ்சள் பூஞ்சை நோய் உடலுக்குள்ளிருந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், உறுப்புகளைச் செயலிழக்க வைத்துவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், மஞ்சள் பூஞ்சையின் அறிகுறியாகச் சோம்பல், உடற்சோர்வு, பசி குறைவாக எடுப்பது அல்லது பசியின்மை, எடைகுறைவு அல்லது மோசமான வளர்சிதை மாற்றம், கண்களில் கீழ் கருவளையங்கள் தோன்றுவது மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகளாகும்.

மோசமான ஆக்சிஜன் பயன்பாடு, தவறான ஸ்டெராய்டு பயன்பாடு, மோசமான சுகாதாரம் ஆகியவற்றால் பூஞ்சை நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.