கொங்கு நாட்டார் தமிழ்ப்பணி  – இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக,  “கொங்கு நாட்டார் தமிழ்ப்பணி” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று (06.05.2021)நடைபெற்றது. அந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி  தலைமை உரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரை வழங்கினார்.

சிறப்புவிருந்தினராக, கோயம்புத்தூர் சரவணம்பட்டி சிரவை ஆதினம், கெளமார மடாலயம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   புலவர்களின் பெருமை கூறி கற்போரும், கற்பிப்போரும் கொண்டிருக்க வேண்டிய தன்மை உ.வே. ச.அவர்களின் தமிழ்ப்பணி வழி இருக்க வேண்டும் எனக்கூறினார்.

கொங்குதல புராணங்கள் பற்றியும் பேரூர் புராணம், குருந்தமலைஅந்தாதி, பிள்ளைத்தமிழ் என அளவில்லா சிறப்புமிக்க கொங்குநாடு பற்றியும், கொங்குநாட்டுப் புலவர்கள் குறித்தும், புலவர்களின் படைப்பாற்றல் பற்றியும், தமிழ்ப்பணி, இறைப்பணி என அனைத்திற்கும் முதலாகவும், முனைப்பாகவும் இருக்க வேண்டிய குருநாதர்களின் பண்புகளை  இரா. கா. மாணிக்கம் அவர்களின் நூலில் கொங்குநாட்டார் தமிழ்ப்பணி காப்பியப்புலவர்கள் எனும் கட்டுரையின் போக்கினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.