மாட்டு வண்டியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம்      

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து இன்று  (27.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாட்டு வண்டியில்  அமர்ந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் ஏராளமான பா.ஜ.க மற்றும் அதிமுக தொண்டர்கள் மாட்டு வண்டியின் பின்னால் அணிவகுத்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தமிழ்நாடு ரேக்ளா கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது