பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்பா சேவா டிரஸ்டின் 19 வது ஆண்டு புஷ்பாஞ்சலி விழா

கோவை வடவள்ளி பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்பா சேவா சார்பாக 19 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை, வடவள்ளி பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்பா சேவா டிரஸ்டின் 19 வது ஆண்டு புஷ்பாஞ்சலி விழா நியூதில்லை நகரில் உள்ள வைதீக சமாஜத்தில் துவங்கியது. கொரோனா விதி முறைகளை பின்பற்றி குறைவான பக்தர்களுடன் ஸங்கட ஹர கணபதி ஹோம்ம், விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கிய நிகழ்ச்சியில், யாகசாலையில் சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், நவக்ரஹ, தன்வந்திரி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு, தொடர்ந்து ஐயப்பசுவாமிக்கு லட்சார்ச்சனையும், அஷ்டாபிஷேகமும் , கலசஅபிஷேகம் மகாபூர்ணாஹுதி, மகாதீபாராதனை செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு கடையநல்லூர் ஸ்ரீராஜகோபால் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடைபெற்றது.

பின்னர் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம், செய்து மகாதீபாராதனையோடு விழா நிறைவு பெற்றது. கொரோனா விதி முறைகளால் அளவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அன்னதானம் வழங்கியதாகவும், ஐயப்பனின் அருள் அனைவருக்கும் கிடைக்க சிறப்பு பூஜைகள் செய்ததாக டிரஸ்டின் தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.