விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – பிரதமர்

பாராளுமன்றத்தில் இன்று (08.02.2021) நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரதமர் மோடி டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என தெரிவித்தார்.

வேளாண் சட்டங்கள் குறித்தும் விவசாயிகள் பற்றியும் பிரதமர் கூறியதாவது:

2014 ஆம் ஆண்டில் இருந்தே விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு விரும்புகிறது மற்றும் அதற்க்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வேளாண் மசோதாக்களில் சீர் திருத்தம் செய்ய இதுவே சரியான காலம் என்றும் இந்த மூன்று வேளாண் சட்டங்களில் குறைகள் ஏதேனும் இருப்பினும் நிச்சயமாக அவை சரி செய்யப்படும்.

மேலும் அவர் விளைபொருட்கள் மீதான  குறைந்த பட்ச ஆதார விலை எப்போதும் இருக்கும், இனி வரும் காலங்களிலும் இது தொடரும் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடுவதில் எவ்வித  பலனும் இல்லை எனவும் போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

News by  : Ramya