சாதனை பாதையில் எஸ்.ஆர்.ஐ.டி

கோவை பச்சாபளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் மாணவ மாணவியர் குழு, மலேசியாவின் யுனிவர்சிட்டி ஆப் பெர்லிஸில் 08.12.2020 அன்று நடைபெற்ற புதுமை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மெய்நிகர் எக்ஸ்போ 2020 (ViDE-2020) ல் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சியகப்படுத்தி ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு கல்லூரியை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்ற பேராசிரியர் மற்றும் மாணவ மாணவியர் குழுவை கல்லூரி நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி மற்றும் கல்லூரி முதல்வர் பால்ராஜ் வெகுவாக பாராட்டினார்கள்.