ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேம்பாட்டுப் பயிலரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் மேலாண்மைத்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து “ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் “மூசா கலிமுல்லா” தலைவர் ஒரிசன் ட்ரைனிங் அகாடமி மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தார். இப்பயிலரங்கத்தில் மாணவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி ஒரு முன்னோட்டம், ஏற்றுமதி மேம்பாட்டு மையம், உலகளாவிய போக்க்குவரத்து மேலாண்மை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் முறை மற்றும் அதில் பயன்படுத்தும் ஆவணங்கள், உலகளாவிய விற்பனை உத்தி, ஏற்றுமதி இறக்குமதியில் பொருளின் விலை நிர்ணயம் செய்யும் முறை வெளிநாட்டு வணிகத்தில் பண பரிவர்த்தனை, காப்பீடு, வணிகமுறை மற்றும் அரசின் சலுகைகளைப் பெறும் முறை ஆகிய தலைப்புகளில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.