உக்ரைன் பல்கலைக்கழகத்துடன் வேளாண் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மெய்நிகர் வழியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு இணையவழியில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப்படிப்பு முதன்மையர் கென்னடி வரவேற்புரை வழங்கினார்.

உக்ரைனிலுள்ள தேசிய உயிர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் காசுக் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் ஸ்ரீதர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியைப் பற்றி எடுத்துரைத்தனர்.

உக்ரைன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் நிக்கோலன்கோ மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.