ஸ்மார்ட் சிட்டி பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று 18.09.2020 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளான மாதிரி சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், தொலைதொடர்பு கேபிள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், அலங்கார தெரு விளக்குகள் அமைக்கும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குளங்களையும் புனரமைத்து பூங்காக்கள் அமைத்து மேம்படுத்துதல், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் மற்றும்  சாலைகள் அமைத்தல், பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும், குப்பைகள் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களின் பணிகள் குறித்தும்,  மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற பணிகள் மற்றும் முடிவடையும் நிலையில் உள்ள பணிகள், முடிக்கப்படாமல் உள்ள பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்து ஒவ்வொரு பணிகளையும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒதுக்கீடு செய்து அந்த நாட்களுக்குள் பணிகளை முடிக்கப்பட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், ஸ்மார்ட் சிட்டி செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.