நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள் என அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நனவாக்கும் விதமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்புகள் தற்போது அதிகம் உள்ளதாக கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தகவல்.

தற்போது மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் கட்டாயம் ஏற்ப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த அனைத்து தகவல்களையும் அளிக்கும் நோக்கத்துடன் கோவையில் சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இதில் அவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசிய, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட்ஸ் நிறுவனர் முகமது கனி, கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து மருத்துவர்களாக உருவாக்கி வருவதாகவும், குறிப்பாக குறைந்த செலவில் அனைத்து விதமான வசதிகளுடன் பாதுகாப்பாக மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் பயில வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக இந்த வெளிநாட்டு பல்கலைகழகங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இங்கு ஐந்து வருடம் பயின்று இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு எப்.எம்.ஜி.திறனறிவு தேர்வில் எழுதில் வெற்றி பெறும் வகையில் இலவச பயிற்சிகளை லிம்ரா மேற்கொள்வதாக தெரிவித்தார்.