ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இணையவழியில் நடைபெற்ற வரவேற்பு விழா

கோவை க.க.சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் 27வது வரவேற்பு விழா இணைய வழியில் நடைபெற்றது.

இணைய வழியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இளங்கோவன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியில் உள்ள இளங்கலை முதுநிலை பாடப்பிரிவுகளைப் பற்றியும் மாணவர்களின் பல்கலைக்கழக மதிப்பெண் தரவரிசை பட்டியல் குறித்தும். கல்லூரியில் உள்ள இணையவழி வகுப்புகளை பற்றியும் விளக்கி கூறினார்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் பிரபாகரன் தலைமையுரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் வாசு தொடக்கவுரை வழங்கினார். இதில் கல்வியின் முக்கியத்துவம், கல்லூரியில் நடைபெறும் இணையவழி வகுப்புகளின் சிறப்புகளை பற்றியும் எடுத்துரைத்தார். இறுதியில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கிரிசன் நன்றியுரை வழங்கினார்.