ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் விர்ஷூவல்  ஹேக்கத்தான் 2.0

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரோகிராமர்கள் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் கணினித்துறைகள், புரோகிராமிங் கிளப் ஆகியவை இபாக்ஸ் உடன் இணைந்து விர்ஷுவல் ஹேக்கத்தான் 2.0 என்ற இணையவழி போட்டி நடைபெற்றது. இந்த கோடிங்கில் ஆர்வம் மிகுந்த கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20 க்கும் அதிகமான கலை அறிவியல் கல்லூரிகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களிடையே மிகவும் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கம்பியூட்டர் அப்ளிகேஷன் துறை மாணவர் பத்ம பாலாஜி முதல் இடத்தையும், கோவை ஆர்.வி.எஸ். கல்லூரியின் கம்பியூட்டர் அப்ளிகேஷன் துறை மாணவர் ஷாஜகான் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். கல்லூரியின் துணை முதல்வர் தீனா, கணினியியற்புல முதன்மையர் அன்னசரோ விஜயேந்திரன், துறைத்தலைவர்கள் சுமதி, கிருஷ்ணப்பிரியா, மரிய பிரசில்லா, ஹரிபிரசாத் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.