கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக ஆய்வு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணியில் 1800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் மாநகரில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாகவுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதிகளை சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து மாநகரில் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று நோய்த் தொற்று கண்டறியும் பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரபடுத்தியுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளில் 1,800 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1,500 பேர் தடுப்பு பணிக்கு ஈடுபடுத்த உள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.