விஞ்ஞானி ஜான் டால்டன் பிறந்த தினம்

அணுக்கொள்கையின் தந்தை, ஜான் டால்டன் 1766 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பலவித நீர்மங்களின் ஆவியழுத்தத்தைக் கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டைக் கண்டறிந்தார்.

இவர் மிகச்சிறிய பிளக்க முடியாத அடிப்படை பொருளுக்கு அணு என்று பெயரிட்டார். மேலும், அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார்.

நவீன அணுக்கோட்பாட்டை உருவாக்கிய ஜான் டால்டன் 1844 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மறைந்தார்.