8 வாரங்களுக்கு பின் இயல்பு நிலை ஞாயிற்றுக்கிழமை

ஞாயிறு பொது முடக்க தளர்வுகளால் 8 வாரங்களுக்கு பின் கோவையில் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படத்துவங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை முதல் வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்ட சாலைகளில் வெரிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் தளர்வு செய்யப்பட்டதால் 8 வாரங்களுக்கு பின் மீண்டும் கோவை இயல்பு நிலைக்கு திரும்பியது.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கமாக இருந்தது.

முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.