கட்டிடங்கள் சரி செய்யும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவையில் காலி இடத்தில் நடைபெறும் கட்டிடங்கள் சரி செய்யும் பணிகளை  மாநகராட்சி விரைந்து முடிக்க தினசரி காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் பேருந்து நிலையங்களில் கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்ததையடுத்து, பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அந்தந்த மார்க்கெட் பகுதிகளுக்கு பழைய படி மாற்றி அமைக்கப்பட்டன.

இந்நிலையில், உக்கடம் மார்க்கெட் எதிரே உள்ள காலி மைதானத்தில் உக்கடம் ராமர்கோவில் வீதி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். கடைகள் அமைத்துள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் சரி செய்யும் பணிகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறும் வியாபாரிகள், பணிகளை விரைந்து முடித்தால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நெருக்கடியிலிருந்து மீழ உதவியாக இருக்கும் என்கின்றனர். சுமார் 1000 குடும்பங்கள் அந்த இடத்தில் நடைபெறும் வியாபாரத்தை நம்பி உள்ளனர்.