தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு கருத்தரங்கம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் National Cyber Safety and Security Standards இணைந்து நடத்திய இரண்டு நாள் “தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு கருத்தரங்கம் 2018”, கல்லூரியின் கலையரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எஸ்.ராஜேஸ்வரன், முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அவர்கள் கூறுகையில், சைபர் குற்றங்கள் பணபரிவர்த்தனை, ஆன்லைன் விளையாட்டு மோசடி போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள். இதற்கான சட்டங்கள், புகார் அளிக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார் Dr.E.KHALIERAAJ ADDL. Director – General, National Cyber Safety and Security Standards அவர்கள் கூறுகையில், சைபர் குற்றங்களால் நாட்டில் நடைபெறும் பல்வேறு விதமான இமெயில், இணைய பாதுகாப்பு, புதிய அறிவியல் நுட்பத்தை கற்றுக்கொண்டால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள், பாதுகாப்பு தகவல் மற்றும் நிகழ்வு மேலாண்மை இணைய பாதுகாப்பு, தொழில்நுட்பம் சார்ந்த வினாக்களுக்கு கலந்துரையாடல் மூலம் விடை அளித்து உற்சாகப்படுத்தினார். மேலும் இணைய வழியில் பாதுகாத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள் நவீன சுகாதார அமைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், செயற்கை நுண்ணறிவு, வைரஸ் தாக்குதல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்றவை இவ்விழாவில் பலரால் பகிரப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி தலைவர் இந்து முருகேசன், கல்லூரி செயல் அறங்காவலர் சூர்யா, கல்லூரி முதல்வர் என்.மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் எம். ராஜேஷ் மற்றும் அனைத்து தலைவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.