கணினித் துறை சார்பாக ஒருநாள் சர்வதேச கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கணினித் துறை சார்பாக “Business Intelligence and Data Analytics” என்ற தலைப்பில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வானம் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் வெங்கிடசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை பேராசிரியை புவனேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டனர். உடன் கணினித் துறையின் தலைவர் ரங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.