ரோட்டரி கிளப் சார்பாக 75வது ஆண்டை முன்னிட்டு சமையல் போட்டி

கோவையில் ரோட்டரி கிளப்   சார்பாக வருடத்திற்க்கு ஒரு முறை சமையல் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இந்த வருடம் ரோட்டரி கிளப் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சமையல் போட்டி கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.  சமைப்பதற்குத் தேவையான பொருட்கள்,  உபகரணங்களை வழங்கி இப்போட்டி காலையில் துவங்கியது.  குழுவிற்கு 3 நபர்கள் வீதம் 55 குழுக்களாக பிரித்து நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல்பரிசு வென்ற பெண்ணிற்கு 50 ஆயிரம் பணம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.  மேலும் சைவம் மற்றும் அசைவம் வகை உணவுகளை சமைத்து அசத்திய பெண்கள், தங்கள் சமைத்த உணவுகளை பற்றி விளக்கமும் அளித்தனர். போட்டி ஆரம்பம் முதல் பெண்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கு பெற்றனர்.  இந்த மாதிரியான போட்டிகள் அவர்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.