சபேரியா ஆலயத்தில் பெயர் பலகையை வைத்த அரசு

ஆலயம் கட்டும் இடத்தில் வட்டாட்சியர் அரசுக்கு சொந்தமான இடம் என்று பெயர் பலகையை வைத்ததால் ஆலயத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்

கோவை  சவுரிபாளையம் பகுதியில் சபேரியா ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பங்காளராக உள்ள நிலையில் ஆலயத்துக்கு சொந்தமான கல்லறை வீதியில் இந்த இடமானது 1968ல் அரசால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் அருகில் பிலோமீனால் பள்ளியானது இயங்கி வரும் சூழ்நிலையில் சில மாதங்களாக பள்ளிக்கு அருகில் ஆலய கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் இன்று தெற்கு வட்டாட்சியர் அவர்கள் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று திடீரென பெயர் பலகையை வைத்தனர். இதையடுத்து ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் வந்த வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு பலகையை அகற்றினர். இதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.