ராம்ராஜ் காட்டன் நடத்திய விளையாட்டு போட்டிகள்- ஊழியர்கள் ‘அபாரம்’

திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் அண்மையில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில், கிரிக்கெட், கோகோ, கபடி, உறியடி, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

போட்டிகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் செல்வகுமார் மற்றும் கணபதி ஆகியோர் தொடங்கி வைத்து பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர்.