அமிர்தாவில் மழலையர்களின் ஆண்டுவிழா!

மங்கலம் அமிர்தவித்யாலயம் பள்ளியில் மழலையர்களின் ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி பவதாரணி வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் வித்யாசங்கர் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்து பள்ளியின் வளர்ச்சி நிலை குறித்துப் பேசினார்.

இவ்விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவின் கௌரவ விருந்தினர் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி மாணவர்கள் வளரும் சூழலைப் பற்றி பெற்றோர்க்கு எடுத்துரைத்தார். இதனை அடுத்து மாணவர்களின் கண் கவரும் நிகழ்ச்சிகளான கிருஷ்ணரின் அவதாரங்களை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினர் மழலையர்கள்.

இக்கலை நிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்தாக வந்து நின்றது. இவ்விழாவில் 280 மழலையர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவி செல்வி தேவி சம்யுக்தா நன்றியுரை வழங்கினார். சாந்தி மந்திரம் இசைக்கப்பட்டு இவ்விழா இனிதே நிறைவடைந்தது.