ரத்தினம் குழுமத்தின் விளையாட்டு தின விழா

ரத்தினம் குழுமத்தின் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில்  நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக  சிஆர்பிஎப் துணைத் தளபதி ஒலிம்பியன் ஜின்சி பிலிப் கலந்து கொண்டு, தனது வாழ்க்கை சாதனைகள் பற்றிய தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார், அவரது அனுபவங்கள் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார், விளையாட்டு திறன் மனப்பான்மையை ஊக்குவித்தார்.

கல்லூரி தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தனர்.

ஆயுதப்படைகள், போர் விமானம் மற்றும் கடற்படை அணிகளின் அணிவகுப்புடன் நிகழ்வு தொடங்கியது.  கூடுதலாக, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கலைக் கல்லூரியில்  நீரஜ் சோப்ரா அணி ஒட்டுமொத்த சாம்பியனாகவும், பி.வி.சிந்து அணி துணை சாம்பியனாகவும் தேர்வு செய்யப்பட்டது.  இதில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் படிப்பிற்கான  உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் மற்றும் டீன்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.