கொங்குநாடு கலை கல்லூரியில் கருத்தரங்கம் 

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மொழிகளில் குழுவின் நிதியுதவியுடன் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் “இந்திய மொழிகள் மற்றும் மெய்யியல் ஒருமைப்பாடும் ஆதிசங்கரரின் பங்களிப்பும்” என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாகக் கோயம்புத்தூர், சின்மயா பள்ளிகள் மற்றும் சின்மயா மிஷனின் ஆன்மிக வழிகாட்டி பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் உமாபதி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி காணொளி வாயிலாயத் தலைமையுரையாற்றினார்.

கருத்தரங்கத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா, மொழியின் இன்றியமையாமை குறித்தும் இந்திய மொழிகளின் சிறப்பு குறித்தும் எடுத்துரைத்தார். இந்திய மொழிகள் மற்றும் மெய்யியல் ஒருங்கிணைப்பிற்கு ஆதிசங்கரர் ஆற்றிய பங்களிப்பைக் குறிப்பிட்டார். இரண்டாவது அமர்வில் உரையாற்றிய பேராசிரியர்  உமாபதி  ஆதிசங்கரரின் அத்வைத கொள்கைகளை எடுத்துரைத்தார்.