பட்டப்படிப்பு வாழ்வின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் கருவி  – சிறப்பு விருந்தினர் சிவக்குமார் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் எஸ்.என்.ஆர், அறக்கட்டளை நிர்வாக இணை இயக்குநர் சுந்தர் மற்றும் கல்லூரி முதல்வர் சீதாராமன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை இயக்குநர் சிவக்குமார் கலந்துகொண்டு,  94 இளங்கலை மற்றும் 33 முதுகலை மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், பட்டப்படிப்பு என்பது மாணவர்களின் எதிர்கால தொழில் முன்னேற்றம், வாழ்வியல் ஒழுக்கம், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த உதவும் கருவியாகும் என்றார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக இணை இயக்குநர் சுந்தர் பட்டதாரிகளை வாழ்த்தி தலைமையுரையாற்றினார். அவர் பேசுகையில், பட்டதாரிகளுக்கு ஆர்வம் விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்கும் திறன்களை மேம்படுத்தி சமூகத்திற்குச் சிறந்த இயன்முறை மருத்துவராக விளங்க ஊக்குவித்தார். கடந்த 36 ஆண்டுக் கால பயணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயன்முறையை மருத்துவக் கல்லூரியின் முன்னேற்றமானது தரவரிசை மற்றும் அங்கீகாரத்தில் முன்னிலை வகிக்கிறது. மேலும் கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் பல விருதுகளைப் பெற்றதற்காக மதிப்பிற்குரிய முதல்வர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தினர்.

கல்லூரி முதல்வர் சீதாராமன் தனது வரவேற்புரையில், மறுவாழ்வியல் துறையில் இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், இயன்முறை மருத்துவத்துத் துறையின் தற்போதைய வளர்ச்சியையும், மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் இயன்முறை மருத்துவத்துறையின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மேற்கோள்காட்டினார்.

இளங்கலை 2018-2022 ஆம் ஆண்டு மாணவி தங்கமதி. பி, இளங்கலை 2019-2023 பூர்ணிமா .டி, முதுகலை 2020 – 2022 ஆம் ஆண்டு மாணவி பவுசி நிசா.எப் அகிய வெளிச்செல்லும் மாணவிகளுக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக தங்கப்பதக்ககமும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.