தமிழக விற்பனையில் புதிய மைகல்லை எட்டியது டிவிஎஸ்  ஐக்யூப் 

இரு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனமான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், தனது டிவிஎஸ்  ஐக்யூப் சீரிஸ்  வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் 20000-க்கும் அதிகமாக விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 2.5 லட்சத்திற்கும் அதிகமான டிவிஎஸ்  ஐக்யூப் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதால், இந்த துரிதமான வளர்ச்சி மின்சார வாகன பயன்பாட்டுக்கு உத்வேகமளிப்பதாக இருக்கிறது.

இந்த மின்சார வாகனப் புரட்சியை முன்னெடுக்கும் வகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மேலும் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது, இதன் தொடர்ச்சியாக, வாடிக்கையாளர்கள் இப்போது கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் டிவிஎஸ்  ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் போது, ஃபேம் II மானியத்துடன் கூடுதலாக ரூ.12,499 ரூபாய் வரை பலனடையும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.  இதனால் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்பு விலை 135,157 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

டிவிஎஸ்  ஐக்யூப், நகர்ப்புறங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதன் மேம்பட்ட சிறப்பு அம்சங்களுடன் தனித்துவமிக்கதாக திகழ்கிறது. மிக வலுவான ஆற்றல் கொண்ட 3.4 கேடபிள்யுஹச் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு,  அன்றாடம் 100 கிலோமீட்டர்கள் பயணிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதன் இருக்கைக்கு அடியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விசாலமான 31-லிட்டர்  அளவிலான சேமிப்பக பகுதி அத்தியாவசிய பொருட்களைப் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தாராளமான இடத்தை அளிக்கிறது, அதே நேரத்தில் டிவிஎஸ்  ஐக்யூப்-ன் பெரிய ஃபுட்போர்ட் மற்றும் அகலமான இருக்கை போன்ற அன்றாட பயன்பாட்டுக்கு அவசியமான அம்சங்கள் எளிதில் சவாரி செய்ய உதவுவதோடு, கூடுதல் செளகரியத்தையும் அளிக்கின்றன. மேலும், டிவிஎஸ் ஐக்யூப் 30 பைசா செலவில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க முடியுமென்கிற அளவுக்கு மிகக் குறைந்த பயணிக்கும் செலவின் மூலம் வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகளில் 1.2 லட்சம் ரூபாய் வரை சேமிப்பைப் பெற முடியும். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்கு மாறியிருப்பது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மீது மக்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை அப்படியே பிரதிபலிப்பது போல் அமைந்திருக்கிறது.